வியாசராஜ தீர்த்தர் ஸ்தாபித்த அனுமார் கோயில்கள்! / புதிய நெடுந்தொடர் கட்டுரை

அனைவருக்கும் வணக்கம்,

எத்துணை எத்துணை மகான்கள்... எண்ணற்ற பல அற்புதங்கள்.. மத்வ பரம்பரையில் வந்த மகான்களின் அற்புதங்களை சொல்லி மாளாது. அப்படி ஒரு மிக பெரிய அற்புதங்களை நிகழ்த்திவிட்டு, இன்றளவும் நவபிருந்தாவனத்தில் பக்தர்களின் வேண்டுதல்களை ஆண்டாண்டு காலமாக நிவர்த்தி செய்துவருகிறார் என்று சொன்னால், அந்த மகானின் பெருமைகளை என்னவென்று சொல்வது! அந்த மஹான் வேறுயாருமில்லை, நம் ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர்தான்.

வியாசராஜர் என்று சொன்னாலே முதலில் நம் நினைவுக்கு வருபவை; விஜயநகர பேரரசரை காப்பாற்றினாரே.. அதுதான் நினைவுக்கு வரும். ஆனால், முக்கிய பிராணனான வாயு பகவான்தான் நினைவுக்கு வரவேண்டும் அல்லவா? வியாசராஜருக்கும் வாயு பகவானுக்கும் மிகப் பெரிய தொடர்பு இருக்கிறதல்லவா? வியாசராஜர் என்று சொன்னால் ஏன் அனுமானை நினைக்கவேண்டும்? போன்ற பல கேள்விகளுக்கு விடை தரவிருக்கிறது, புதிய நெடுந்தொடர் கட்டுரை மிக விரைவில்...

- உங்கள் ஆசிரியர்.

தேதி: 15.05.2024

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027     

கருத்துகள்